19.2.2023 அன்று மறைவுற்ற தி.மு.க. மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களின் படத்திற்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினர் பரிதாபேகம், மீரா உசேன், அய்சாகனி, பெருஸ்கான், ராஜாகனி, நாகூர் கனி, சாகுல் ஹமீது, சேக் அப்துல்லா, சாதிக், கடாபி, சதாம் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். உடன்: ஒன்றிய மேனாள் இணை அமைச்சர் பழனி மாணிக்கம், தஞ்சை மாநகர மேயர் சண். ராமநாதன், இறைவன் (மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.), செல்வம் (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்), திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக அமைப்பாளர் இரா. குணசேகரன், தஞ்சை. மு. அய்யனார், வழக்குரைஞர் தஞ்சை அமர்சிங், வழக்குரைஞர் அருணகிரி மற்றும் தோழர்கள் மரியாதை செய்தனர். (தஞ்சாவூர் - 21.2.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment