அய்தராபாத்,பிப். 27- தெலங்கானாவின் ஜகதியல் மாவட்டத்தில் உள்ள கொண்டாகட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் உள்ளது. அங்கு, 20.2.2023 அன்று அதிகாலை கோவில் கருவறையில் இருந்த 5 கிலோ வெள்ளிப் பொருட்களை, சில நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், கோவில் வளா கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், காவி உடையில் வந்த மூன்று நபர்கள், பின்பக்க வாயில் வழியாக சென்றதை கண்டறிந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.
மதவாத கண்ணோட்டத்தில்
மராட்டியத்தில் ஊர்களின் பெயர் மாற்றம்
மும்பை, பிப். 27- மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறை வேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. அதை ஏற்றுக் கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும். இந்த தகவலை துணை முதல் அமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment