சென்னை, பிப்.5- முன்னணி உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்ப செயல்தளமான வேகூல், விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் அவுட்குரோ தளத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களை பாதுகாப்ப தற்கான தயாரிப்பு பொருட்களை இணைத்திருக்கிறது.
அவுட்குரோ நேரடி அமைவிடங்களில் மட்டுமன்றி டிஜிட்டல் முறையிலும் இயங்கிவருகிறது. பயிர் பாதுகாப்பு தீர்வுகளில் உலகளவில் முதன்மை வகிக்கும் நிறுவனமான யுபிஎல் சஸ்டெயினபிள் அக்ரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனமும், வேகூல் நிறுவனமும் இணைந்து செயல்படுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன, வேளாண் பொருளாதாரம் குறித்த விரிவான ஆலோசனை சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குவதோடு பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கு முழுமையான பயிர் பாதுகாப்பு தயாரிப்பு பொருட்களையும் வழங்குவதே இந்த ஒத்துழைப்பு உடன்பாட்டின் நோக்க மாகும் என்று வேகூல் ஃபுட்ஸ் இணை நிறுவனர் சஞ்சய் தாசரி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment