அதானி குழும மோசடி விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

அதானி குழும மோசடி விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை

பிரகாஷ்காரத் கோரிக்கை

சென்னை, பிப்..22- அதானி குழும மோசடிகள் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கோரிக்கை வைத்துள்ளார்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் 2 நாள் கூட்டம் நேற்று பொன் னேரியில் தொடங்கியது. இதில் பங்கேற்ற காரத் பின்னர் செய் தியாளர்களிடம் கூறியதாவது: செயற்கையாக அதானி குழும பங்குகள் உயர்த்தப்பட்டு, பங்குச் சந்தையில் மோசடி வேலைகள் நடந்துள்ளன. இந்த விவகாரத்தில் செபி, ரிசர்வ் வங்கி ஆகியவை தலையிடவில்லை. இந்த விவகாரத் தில் தலையிட்ட உச்ச நீதிமன்றமும் பங்கு சந்தையின் சிறு முதலீட் டாளர்களை பாதுகாப்பதற்காக நிபுணர் குழுவைஅமைக்க மட் டுமே உத்தரவிட்டுள்ளது. 

ஆனால், அதானி குழும மோச டிகள் குறித்து விசாரிக்க உத்தர விடவில்லை. எனவேதான் அதானி குழும மோசடிகள் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசா ரிக்க வேண்டும். திரிபுராவில், ஆளுங்கட்சி தரப்பில் ஏற்படுத்தப் பட்ட தடைகள், தாக்குதல்களை தாண்டி கிட்டத்தட்ட 90 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள் ளார்கள். ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வாக்குகள் விழுந்துள்ளது என்ற சந்தேகத்தால், பாஜகவினர் பதட்ட நிலையில் தாக்குதல்நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் தவறு செய்த வர்களை கைது செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள 22 மொழிகளையும் அரசு ஊக்கப் படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

No comments:

Post a Comment