சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கள ஆய்வாளர், வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்வுக்கான முடிவுகள் 15.02.2023 அன்று வெளியிடப்பட்டது.
இப்போது, (TNPSC) தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான உடல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில், அடுத்தகட்ட தேர்வுக்கு தகுதியான நபர்களின் பட்டியல்(TNPSC) இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் 06.03.2023 முதல் 11.03.2023 வரை, ஜிழிறிஷிசி அலுவலகத்தில் வைத்து நடத்தப்படும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் விண்ணப்பதாரர்களின் வயது, PSTM, கல்வி தொடர்பான விண்ணப்பம், தகுதி மற்றும் உரிமைகோரல்களின் உண்மை நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும்.
அதற்கு பின்னர் அவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment