எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பிஜேபி ஆட்சி - சோனியா கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பிஜேபி ஆட்சி - சோனியா கண்டனம்

நவராய்பூர், பிப். 27- நாட்டின் ஒவ்வொரு அமைப்பை யும் பாஜகவும், ஆர்எஸ் எஸ்.சும் கைப்பற்றிவிட் டதாக காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் 85ஆவது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்த 3 நாள் மாநாட்டில் சோனியா காந்தி கலந்து கொண்டு உரையாற்றி னார். அப்போது அவர் பேசியதாவது: 

''காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டுக் கும் இது ஒரு சவாலான காலம். பாஜகவும், ஆர் எஸ்எஸ்சும் நாட்டின் ஒவ்வொரு அமைப்பை யும் கைப்பற்றி அவற்றை நாசமாக்கிவிட்டன. ஒரு சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருந்து நாட் டின் பொருளாதாரத்தை யும் அவை சீரழித்துவிட் டன. நமது அரசியல் சாசனத்தின் மதிப்பை அவமதிக்கும் வகையில் பாஜக அரசின் செயல் உள்ளது. பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின ருக்கு எதிரான வெறுப்பு நெருப்பை கொழுந்து விட்டு எரியச் செய்யும் நோக்கில் பாஜகவின் அரசியல் கட்டமைக்கப் பட்டுள்ளது. 

பாஜகவை நாம் வீரி யத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மக்களைச் சென்று சந்திக்க வேண் டும். காங்கிரஸ் கட்சியின் செய்தியை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட் டுமல்ல; இது அனைத்து மதங்கள், அனைத்து ஜாதி கள், அனைத்து பாலினங் களின் குரலை பிரதிபலிக் கும் இயக்கம். நாட்டு மக் கள் அனைவரின் கனவுக ளையும் காங்கிரஸ் கட்சி நனவாக்கும். இந்திய ஒற் றுமை நடைப்பயணம் கட் சிக்கு மிகப் பெரிய திருப்பு முனை. அத்துடன் எனது இன்னிங்ஸ் முடிவடைவ தில் மகிழ்ச்சி அடைகி றேன்.'' இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment