பதிலடிப் பக்கம் - மின்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

பதிலடிப் பக்கம் - மின்சாரம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

முழுப் பூசணிக்காயை மறைக்கும் அதானி குழுமம்

அதானி குழுமம் சார்ந்து விக்கிப்பீடியா புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அதானி நிறுவன ஊழியர்களும் இந்தி யாவில் செயல்படும் சில மூத்த ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் அதானி மற்றும் அவரது குடும்பம் தொடர்புடைய விக்கிப்பீடியா கட்டுரைகளில் நடுநிலையற்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சேர்த்ததாக விக்கிப்பீடியாவின் செய்தி இதழான ‘தி சைன் போஸ்ட்’ அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் ஒருவர் தான் பெரும் தொகையாக பணம் பெற்றுக்கொண்டு தகவலைப் பதிந்ததாகவும், அவருக்கும் அதானி குழுமத்திற்கும் இடையே நடந்த உரையாடலை ஒப்புக்கொண்டார் என்றும் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது. 

“அதானி பற்றிய கட்டுரைகள் 2007ஆம் ஆண்டு முதல் விக்கிபீடியா பக்கத்தில் எழுதப்பட்டு வரு கின்றன. இதுவரையில் 40 போலி கணக்குகள் மூலம் விக்கிப்பீடியாவில் அதானி மற்றும் அவரது குடும்ப நிறுவனங்கள் தொடர்பான 9 கட்டுரைகளில் நடுநிலை யற்ற தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் அதானி நிறுவன ஊழியர்கள்” என்று ‘தி சைன் போஸ்ட்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கவுதம் அதானிக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி, அறிக்கை வெளியிட்ட ஒரு மாதத்திற்குப் பின்: விக்கிபீடியா நிர்வாகம் தற்போது, அதானி குழுமத் தின் ஊழியர்கள் மற்றும் சில மூத்த ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் நடுநிலையற்ற  தகவல் களை விக்கிப்பீடியா பக்கத்தில்  முழுமையுமான உண்மைக்குப் புறம்பான  தகவல்களை உள்ளீடு செய்துள்ளனர் எனக் கூறியுள்ளது.

40க்கும் மேற்பட்டோர் தடை செய்யப்பட்ட அதானி நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் இந்தி யாவில் மூத்த ஊடகவியலாளர்கள் என்று கூறிக் கொள் ளும் சிலர் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு அதானி குடும்பம் மற்றும் குடும்ப வணிகங்களில் தொடர்புடைய கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர் அல்லது திருத்தியுள்ளனர். அதானி குழுமம் தொடர் புடைய பல கட்டுரைகள் அனைத்துமே விக்கிபீடி யாவின் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரான மற்றும் மனசாட்சிக்கு விரோதமான தகவல்களைச் சேர்த்து உள்ளனர்.

அதிலும் முக்கியமாக ஒரு மூத்த ஊடகவியலாளர் அதானி குழும நிறுவனத்தின் அய்.பி. முகவரியில் இருந்து அதானி குழுமத்தின் கட்டுரையை முழு வதுமாக மாற்றி எழுதியுள்ளார் என்று விக்கிபீடியாவால் நடத்தப்படும் "தி சைன்போஸ்ட்" செய்தியை வெளி யிட்டு உள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக sஷீநீளீஜீuஜீஜீமீts முதலாளிகளின் எச்சிலுக்காக காத்திருந்து, அவர்களின் கண்ணசைவிற்கு ஏற்ப இயங்கும் பொம்மைகள் என அழைக்கப்படும் பொய்யான தகவல்களைப் பரப்பும் நபர்களைத் தனது நிறுவனத்திலேயே நியமித்துக் கொண்டு, கவுதம் அதானி, அவருடைய குடும்பம், நிறுவனங்கள் குறித்து விக்கிபீடியா பக்கங்களில் நடுநிலை அல்லாத தகவல்களைச் சேர்த்தும், எச் சரிக்கை அளிக்கும் பதிவுகளை மாற்றியும் வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது

விக்கிபீடியா குற்றச்சாட்டு குறித்து, அதானி குழும நிறுவனத்தால் எவ்விதமான விளக்கமும் வெளியிடப்படாத நிலையில், இந்தச் செய்தி சமூகவலைத் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கி பீடியா சமூக மக்களால் எழுதப்பட்ட கட்டுரையில், விக்கிப்பீடியாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் தரும் எச்சரிக்கை வார்த்தைகளை தந்திரமாக  எடிட் செய்து விக்கிபீடியாவின் தரக்கட்டுப்பாட்டு ஆய் வாளர்களின் கண்களில் மண்ணைத்தூவி கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. கவுதம்  அதானியின் சகோதரரான வினோத் அதானி நீண்டகாலமாக வெளிநாட்டு வாழ் இந்தியராக இருக்கிறார், இவரின் தலைமையில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக கருப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு  அதானி குழுமத்திற்குள்  வெளிநாட்டு முதலீடுகளாக மீண்டும் கொண்டுவரப்படுகிறது என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

இதைத் தொடர்ந்து "போர்ப்ஸ்" இதழ் வெளியிட்ட அறிக்கையில் இதற்கு முன்பு  கள்ளத்தனமான பணப் பரிவர்த்தனைகளில் வினோத் அதானிக்கு தொடர் புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்புடைய கணக்குகள் அதானி குழுமத்திற்குப் பலன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதை போர்ப்ஸ் கண்டுபிடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment