"அறிவியலும் - பகுத்தறிவும்" - இளைஞரணி சார்பில் பயிலரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

"அறிவியலும் - பகுத்தறிவும்" - இளைஞரணி சார்பில் பயிலரங்கம்

நாகை, பிப். 1- நாகை மாவட்டம், திருமருகல், விவேகானந்தா மழலையர் பள்ளியில் 28.1.2023 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் எழுச்சியோடு நடை பெற்றது.

கூட்டத்தில் மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன் தலைமையில்  திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் செ.பாக்கியராஜ், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் வி.ஆர்.அறிவுமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெ. தீபன் சக்கரவர்த்தி, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ம.ஆதித்யன், கீழ்வேளூர் ஒன்றிய இளை ஞரணி தலைவர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப் போலியன், மாவட்டச் செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இராச.மு.இளமாறன், மாவட்ட அமைப்பாளர் பொன்செல்வராசு, நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சி.தங்கையன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) முன்னாள் மாவட்ட தலைவர், கழக பேச்சாளர், பொதுக்குழு உறுப்பினர் கோவி. பெரியார் முரசு என்னும் சண்முகசுந்தரம் அவர்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்க லையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

2) மார்ச் 6 திருமருகலில் நடைபெற இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் சமூகநீதி பாதுகாப்பு பிரச்சார பயணத்தின் பொதுக்கூட்டத்தை மாவட்ட திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சியோடு நடத்து வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படு கிறது.

3)கிளைக் கழகங்கள் வாரியாக தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பாக நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

4)சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க தொடர் பிரச்சாரப் பயணத்தை விளக்கி சுவர் விளம்பரங்கள்,பதாகை மற்றும் உள்ளூர் விளம்பரங்கள் செய்வது, தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற் கும் விதமாக  கழக கொடியினை வழியெங்கும் அமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

5) திராவிட மாணவர் கழக 80ஆம் ஆண்டு மாநில மாநாட்டினை கோவையில் அறிவித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

6) பெரியார் வீர விளையாட்டு கழகம் மற்றும் சமூக காப்பு அணி பயிற்சியினை நாகை மாவட்டத்தில் மாதம் இருமுறை மாணவர்கள் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

7) "அறிவியலும், பகுத்தறிவும்" என்ற தலைப்பில் நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒருநாள் பயிலரங் கத்தினை நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

8) திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞர் அணி மாநில கலந்துரையாடல் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

திராவிட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்

1) ம.இளமாறன் (புத்தகரம்) நாகை நகர மாணவர் கழக அமைப்பாளர்.

2) லெ.மணிகண்டன் (புத்தகரம்) திருமருகல் ஒன்றிய மாணவர் கழக தலைவர்.

3) ம.நிதிஷ் (மருங்கூர்) திருமருகல் ஒன்றிய மாணவர் கழக செயலாளர்.

திராவிடர் கழக இளைஞர் அணி புதிய பொறுப்பாளர்கள்

1) செ.சண்முகம் (மாதிரிமங்கலம்) ஒன்றிய இளைஞரணி தலைவர்.

2) சீ. விஜய் (திருசெங்காட்டாங்குடி)

ஒன்றிய இளைஞரணி செயலாளர்.

3) பாக்கியராஜ் (கீழ்வேளூர்)

மாவட்ட  இளைஞரணி துணைச் செய லாளர். 

ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் கூட்டத்தில் கீழையூர் ஒன்றிய தலைவர் ரெ.ரெங்கநாதன், கு.சிவானந்தம், கோபால கிருஷ்ணன், செ.அறிவுசெல்வன், மணி மொழி, அஸ்வதி, சஜன், குருநாதன், செ.ம ணிகண்டன், அன்புமணி, ரூபன்,ரமணன், அய்யப்பன், ம.சந்தோஷ், விஜய், சுந்தர மூர்த்தி, அருண், சேவாக், நிதிஷ், இளமாறன், செ.சந்தோஷ், உதயசூரியா, தேவன், பிரகாஷ், ரெகுநாத் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட மாணவர், இளைஞர் தோழர்கள் கூட்டத் தில் பங்கேற்றனர்.  கூட்டத்தில் அனைவருக் கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டம் சரியாக 9:30 மணியளவில் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment