மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் போட்டி

 சென்னை, பிப். 8-  வேலைவாய்ப்புகளை அதிகளவில் பெற்றுத்தரும் விருந்தோம்பல் துறை மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சமையல் போட்டி எவரெஸ்ட் பெட்டர் கிச்சன் கலினரி சேலஞ்ச் நிகழ்வு சென்னை காட்டாங் குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் நடைபெற்றது.

போட்டியின் பங்கேற்பாளர்கள் சமையல் திறமையில் தங்கள் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை வெளிப்ப டுத்தினர், இந்நிகழ்ச்சியில், தென்னிந்திய செஃப் அசோசியே ஷன் தலைவர் டாக்டர் கே தாமோதரன், ஹரிஷ் ராவ், தமோக்னா சக்ரவர்த்தி ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். இதுகுறித்து இக்கல்லூரி முதல்வர் டாக்டர் டி.ஆண்டனி அசோக் குமார் கூறுகையில், இப்போட்டியானது மாணவர்கள் தங்கள் பல்துறை திறன்களையும், திறமைகளையும் அனுபவிப்பதற்கும் வெளிப் படுத்துவதற்கும் சிறந்த தளத்தை வழங்கியது என்று கூறினார்.

பெட்டர் கிச்சனின் வெளியீட்டாளரான ஏக்தா பார்கேவா கூறுகையில், இந்தப் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு அமெரிக்காவின் ஜெ1செப் பரிமாற்ற திட்டத்தின்  கீழ் 5750 அமெரிக்க டாலர்கள் உதவித்தொகை கிடைக்கும் அதே வேளையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்கள் முறையே 1000 மற்றும் 750 அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவித்தொகையை ஒரு வருடப் பயிற்சியுடன் பெறுவார்கள் என்று கூறினார்.

No comments:

Post a Comment