சென்னை,பிப்.12- உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நீதிபதிகள் நியமனங்களை ஒன்றிய அரசு செய்து வருவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நேற்று (11.2.2023) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தின்போது 7.2.2023 அன்று உடுமலைப்பேட்டையில் முகாமிட்டிருந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நீதிபதிகள் நியமனங்களை ஒன்றிய அரசு செய்து வருவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று அறிக்கைவிடுத்து அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன. திராவிடர் கழகத்தின் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (11.2.2023) காலை 11 மணிக்கு தமிழர் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீதித்துறையில் உரிமையை நிலை நாட்டிடவும், சமூகநீதியைக் காத்திடவும் இடஒதுக்கீடு அவசியம் தேவை என்பதை வலியுறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்ட உரையாற்றினார். மதவாத நஞ்சுடன் இருப்பவர்கள் அதிகார வர்க்கத்தினராக இருக்கிறார்கள். விழிப்புடன் சமூக நீதியைக் காத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினார். கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில துணை செயலாளர், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீர சேகரன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்ட முடிவில் வழக்குரைஞர் பா.மணியம்மை நன்றி கூறினார்.
சென்னை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, வழக்குரைஞர் ரஜினிகாந்த், சென்னை மத்திய மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் இரா.குணசேகரன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட தொழிலாளர் கழக மாநில செயலாளர் திருச்சி மு.சேகர், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் நா.பார்த்திபன், அமைப்பாளர் செந்தூரப்பாண்டியன், துணை அமைப்பாளர் செ.பெ.தொண்டறம், இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ், ஆத்தூர் சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், வஜ்ரவேல், அம்பத்தூர் இராமலிங்கம், நடராஜன், தம்பிபிரபாகரன், இளைஞரணி தளபதி பாண்டியன், மகேந்திரன், சண்முகப்ரியன், வழக்குரைஞர் சென்னியப்பன், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, வழக்குரைஞர் கரூர் இராஜசேகரன், வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன், வழக்குரைஞர் துரைஅருண், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், தொழிலாளர் கழகம் கூடுவாஞ்சேரி மா.இராசு, பெரியார் மாணாக்கன், சீர்காழி ராமண்ணா, நங்கநல்லூர் தமிழினியன், சைதை மு.ந.மதியழகன், சூளைமேடு கோ.வீ.ராகவன், இராமச்சந்திரன், இரா ஜேந்திரன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபன்னா, க.கலைமணி, ஆதம்பாக்கம் சவரியப்பன், அரும்பாக்கம் சா.தாமோதரன், க.தமிழ்செல்வம், செங்குட் டுவன், ஆயிரம் விளக்கு மு.சேகர், செ.உதயக்குமார், தே.ஒளிவண்ணன், ஜனார்த் தனன், தென்.மாறன், செல்லப்பன், துரைராஜ், பகுத்தறிவாளர் கழகம் மாணிக்கம்,
மகளிரணி தோழர்கள் சி.வெற்றிசெல்வி, தேன்மொழி, பசும்பொன், இறைவி, மு.செல்வி, பண்பொளி, வி.வளர்மதி, அன்புமணி, சண்முகலட்சுமி, யுவராணி, த.மரகதமணி, லலிதா, சொப்பனசுந்தரி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, கு.தமிழினி தாணு, செம்மொழி, நூர்ஜகான், இளவரசி, வெற்றி, பா.வெற்றி செல்வி, யுவராணி, மெர்சி ஆஞ்சலாதேவி, சி.அமலசுந்தரி, கோ.கீ.இலக்கியா, முத்துலட்சுமி, பெரியார் பிஞ்சுகள் மகிழினி, இனியன் உள்பட ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment