பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம்

பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்,, “2026ஆம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்சிகள் அறிமுகப் படுத்தப் படும்” என்று அய்க்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சி யாளருமான சேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார். பறக்கும் டாக்சி களுக்கான நிலையங்கள் (வெர்டிபோர்ட்) அமைக்க அவர் ஒப்புதல் வழங்கினார். முதற்கட்டமாக பறக்கும் டாக்சி சேவையானது துபாய் பன்னாட்டு விமான நிலையம், டவுன்டவுன் துபாய், பாம் ஜுமேரா, துபாய் மெரினா ஆகிய 4 பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பறக்கும் டாக்சி சேவை குறித்து துபாயின் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் சிஇஓ அகமது கூறுகையில், “ஒரு பைலட், 4 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வகையில் பறக்கும் டாக்சி இருக்கும். மணிக்கு 300 கிமீ வேகத்தில்செல்லும். துபாய் - அபுதாபி உட்பட மற்ற அமீரகங்களுக்கு இடையே சேவை மேற்கொள்ளதிட்டமிடப்பட்டுள்ளது. இது பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் அபுதாபிக்கு 30 நிமிடத்தில் சென்றுவிட முடியும்” என்றார்.


No comments:

Post a Comment