பாதுகாக்க...
கூட்டுறவு சங்கங்கள் இழப்பில் இயங்குவதை தடுக்க, அங்கு செயல்படும் அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச வாடகையை கூட்டுறவு சங்கங்களுக்கு தர வேண்டும் என தொழிற்சங்க பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அபராதம்
சென்னையில் போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் இருந்து வந்த 1,628 நபர்களிடம் இருந்து போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் ரூ.1.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை கருத்தில் எடுத்துக் கொண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து, 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
திட்டம்
தமிழ்நாட்டில் மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்.
மறைக்க...
அதானி குழும மோசடி விவகாரத்தால் இந்தியப் பொருளாதாரம் ஆபத்தில் உள்ள நிலையில் ஒன்றிய பாஜக அரசு இந்தப் பிரச்சினைகளை மறைக்க மக்க ளுக்கு புதிய வாக்குறுதிகளை அளித்து மோசடியை மறைக்க முயற்சித்து வருகிறது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
தடை
ஆன்லைன் சூதாட்டம், அங்கீகரிக்கப்படாத கடன் சேவைகளை அளித்து வந்த சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் 232 செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
விவசாயிகள்
விவசாயிகள் நாட்டை ஆட்சி செய்யும் நேரம் வந்து விட்டது என பாரதிய ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
செல்லாது
ஆதார் இணைக்காத பான் எண் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செல்லாது என ஒன்றிய அரசு அறிவிப்பு.
No comments:
Post a Comment