சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்கப் பரப்புரைப் பயணம் 3.2.2023 அன்று ஈரோட்டில் தொடங்கி சிறப்பான வரவேற்புடன் நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கும் வகையில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறு கின்றன.
பொறுக்குமா பார்ப்பன இனமலருக்கு?
திருப்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத் திற்காக அமைக்கப்பட்ட மேடை குறித்து விஷமச் செய்தியை பரப்பி உள்ளது.
"கோவில் அருகில் தி.க., பொதுக்கூட்டம் - ரோட்டை மறித்து மேடை; மக்கள் அவதி" என்ற தலைப்பிட்டு அதற்கு ஏற்ப ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளது.
கூட்டம் நடைபெற்ற அரிசிக் கடை வீதி, எப்போதும் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறை யால் அனுமதி வழங்கப்படுகிற இடம். அந்த இடத்தில் திராவிடர் கழகம் கூட்டம் போடும் போது மட்டும் இனமலருக்கு எரிவது ஏன் என்பது நமக்குப் புரியாதா? கோவிலுக்குச் செல் பவர்களை மறித்து மேடை அமைக்கப்பட்டது போல செய்தி போட்டு வழக்கம் போல திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. கோவில் திருவிழாக்கள் என்ற பெயரால் வாரம் முழுவதும் ஊரையே மறித்துக் கொண்டிருப்பார்களே, காஞ்சியில் அத்திவரதர் பொம்மையை வைத்துக் கொண்டு 40 நாள்களுக்கு மேல் ஊரையே நாசப் படுத்தினார்களே, அப்போதெல்லாம் இனமலர் எங்கே போயிருந்தது? அவாளின் ஷேமத்துக்கு என்றால் நாடே நாசமானாலும் பரவாயில்லை.
சமூகநீதி என்றால் சந்துகளில் கூட பேசக் கூடாது, அது தானே அவாளின் ஆசை.
சென்னை கடற்கரை சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை அமைக்கப்பட்ட போது சாலையைக் கடந்து கடற்கரையில் உள்ள காந்தி சிலையைச் சிவாஜி சிலை மறைக்கிறது என்று சம்பந்தமே இல்லாமல் படம் எடுத்துப் போட்டவர்கள் தானே இந்த கூட்டம். (சென்னையில் அந்த இரண்டு சிலைகளும் இருந்தபோது பார்த்தவர்களுக்கு, இரண்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது நன்கு தெரியும்.) அய்ஸ் கடைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ஈபிள் கோபுரம் கூட மறைகிறது என்று சொல்லலாம் தான்.
‘ஆடத் தெரியாதவர் மேடை கோணல்' என்பாராம். நமது பிரச்சாரங்களுக்குப் பதில் சொல்லத் தெரியாதவர்கள் மேடை ரோடை மறிக்கிறது என்கிறார்கள். அவ்வளவுதான் அவர்கள் சரக்கு!
ஒன்று மட்டும் தெரிகிறது. தமிழர் தலைவரின் தொடர் பிரச்சாரத்தால் ஒரு கூட்டத்துக்கு நெறி கட்ட ஆரம்பித்துவிட்டது. இதிலிருந்தே தலைவர் ஆசிரியரின் பயணம் வெற்றிப் பயணம் என்பது ஆரம்பக் கட்டத்திலேயே அப்பட்டமாக தெரிய ஆரம்பித்து விட்டது.
பலே பலே, இன்னும் எழுதுக ஈனமலரே!
No comments:
Post a Comment