சென்னை, பிப். 27- தண்ணீர் தொடர்பான துறையில் இன்றைய புத்தாக்க தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் வகையில் நந்தம்பாக்கம் வர்ததக மய்யத்தில் வாட்டர்டுடே மாத இதழ் சார்பாக ‘வாட்டர் எக்ஸ்போ 2022’ என்ற கண்காட்சி நடைபெற்றது.
இதனை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் துவக்கி வைத்தார். வாட்டர் டுடே இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
3 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 2000க்கும்மேற்பட்ட நீரியல் நிபுணர்கள் ஒரே இடத்தில் கூடினார்கள். மேலும் குடிநீர், கழிவு நீர், கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பான சமீபத்திய தொழில்நுட்பங்கள், சாதனங்கள், நீடித்த தீர்வுகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருந்தது. ஆட்டோமேஷன், நீர்மேலாண்மை மற்றும் பயனுள்ள பாதுகாப்புமுறைகளுக்கான புதிய தொழில்நுட்பங்களும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment