நாசாவின் உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்த பழனி மாணவி தித்திகாவின் ஓவியம் நாசா வெளியிட்ட காலண்டரில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் சார்பில் ஆண்டு தோறும் உலக அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியில் தேர்வாகும் ஓவியங்கள் நாசா வெளியிடும் நாட்காட்டியில் அச் சிடப்படும். இந்த ஆண்டுக்கான ஓவியப் போட்டி சில மாதங்களுக்கு முன்பு நடை பெற்றது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள மாணவ, மாணவிகள் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இதில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற 9 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 10 முதல் 12 வயது பிரிவில் பழனி புஷ்பத்தூர் சிறீவித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக் கும் மாணவி தித்திகாவின் வரைந்த ஓவியம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
விண்வெளி வீரர் ஒருவர் கூடைப் பந்து விளையாடுவது போன்று வரைந்து அனுப்பிய தித்திகா ஓவியம் தேர்வு செய் யப்பட்டது. இந்த ஓவியம் நாசா நாட் காட்டியில் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி தித்திகாவுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாணவி தித்திகாவிடம் இந்த வெற்றி குறித்து பேசியபோது, “நான் 7 வயதில் இருந்தே வரையத் தொடங்கினேன். அப்பா அருண்குமாரும், அம்மா உமா தேவியும் என்னை ஊக்கப்படுத்தினார் கள். இயற்கைக் காட்சிகள், கார்ட்டூன் களை விரும்பி வரைவேன்.
மேலும், ஆயில் பெயின்டிங், பென் சில் கலை கற்றிருக்கிறேன். ஆனால், எனக்கு வாட்டர் கலர் பெயின்ட் வரை வதில்தான் ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கும் போது படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வரைந்து கொண்டே இருப்பேன். தற்போது நாசா காலண்டரில் எனது ஓவியம் இடம் பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச் சியை அளிக்கிறது,'' என்றார்.
2018இல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யம் சார்பில் விண்வெளிக்கு செல்லும் போது என்னென்ன உணவுகள் தேவை என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட் டது. உலக அளவிலான இந்த ஓவியப் போட்டியில் பெண்ணின் அர்ப்பணிப் பைச் சொல்லும் 12 மணி நேர காபி ஓவியம்... என புதிய சாதனை படைத்த பழனியைச் சேர்ந்த காவியா, செல்வ சுறீதத் ஆகியோரது ஓவியங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் தொடர்ச்சியாக பழனி மாணவர் களின் ஓவியங்கள் நாசா காலண்டரில் இடம்பெற்று வருவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமில்லாது பலரும் மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment