பழனி, பிப். 27- 6.2.-2023, காலை 11-30 மணியளவில் கே.கொல்லபட்டியில் பழனி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் மற்றும் புதிய தோழர் கள் இணைப்பு நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு மாவட்டத் தலை வர் மா.முருகன் தலைமை யேற்றார். மேலும் மாவட் டச் செயலாளர் பொன்.அருண்குமார் அனைவ ரையும் வரவேற்றுப் பேசி னார்.
மேலும் இந்நிகழ்வில் வழக்குரைஞர் பி.ஆனந் தன், ந.சக்திவேல், வி.பெரிய சாமி, வி.தினேஷ் குமார், கி.பூவரசன், க.நந்த குமார், கு.சம்பத் குமார், செ.காளி யப்பன், ம.புரூஸ் பெரியார், உள்ளிட்ட தோழர்கள் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட னர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் சி.கருப்புச்சாமி, ஆ.இராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பாலன் புதிய தோழர்களை வாழ்த்திப் பேசினர்.
இந்நிகழ்வில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
(1) கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற திராவிட மாடல் மற்றும் சமூகநீதி விளக்கப் பெரும் பயண நிகழ்வில் பழனி கழக மாவட்டம் ஒட்டன் சத்திரம் பகுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்து தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
(2) எதிர் வரும் மார்ச் 10ஆம் தேதி அன்னை மணியம்மையார் பிறந்த நாளை முன்னிட்டு புதிய கிளைக் கழகங்களில் கொடியேற்றுதல் மற்றும் அம்மா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தல் நிகழ் வுகளை முன்னெடுப்பது எனவும்
(3) பழநி கழக மாவட் டம் முழுவதும் சனாதன எதிர்ப்பு பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது எனவும்,
(4) கழக ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற் றிற்கான புதிய சந்தா சேர்க்கையை துரிதப்ப டுத்துவது போன்ற தீர் மானங்களை கழகத் தோழர்களின் கரவொலி களிடையே தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இறுதியாக ஒட்டன் சத்திர நகரத் தலைவர் வழக்குரைஞர் பி.ஆனந்தன் அவர்கள் அனைவருக்கும் நன்றிகூறினார்.
மேலும் கழகத்தில் இணைந்த புதிய தோழர் களுக்கு மாவட்டக்கழகத் தின் சார்பில் பயனாடை கள் அணிவிக்கப்பட்டன.
No comments:
Post a Comment