பட்டுக்கோட்டை,பிப்.13- பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர், அய்ட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர், ACE TRUST மேனாள் பொருளாளர் ஆசிரியர் சி.வேலு அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 29.01.2023 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் அனைவரையும் வரவேற்றும், ஆசிரியர் வேலு அவர்களின் பண்புகளையெல்லாம் நினைவு கூர்ந்து நினைவேந்தல் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், குருவிக்கரம்பை ஊராட்சி மன்ற தலைவர் லயன்ஸ் வைரவன், அ.ம.மு.க. நகர செயலாளர் பாண் டியராஜன், ACE TRUST இ.வி.காந்தி, ம.தி.மு.க. நகர செயலாளர் குமார், மூத்த பத்திரிகையாளர் வெள்ளி மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சார்பில் கே.வி.கிருஷ்ணன், பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் சு.பாலசுந்தரம், பேராவூரணி ஒன் றிய ஆசிரியர்களின் சார்பில் கோவி.தாமரைசெல்வன், ப.க. பொறுப்பாளர், காரைக்குடி அழகப்பா பல்கலைகழக பேராசி ரியர் கரு.கிருஷ்ணமூர்த்தி, பேராவூ ரணி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், சேது பாவா சத்திரம் ஒன்றிய பெருந் தலைவர் முத்துமாணிக்கம், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பாக இளமரியான், பெறியாளர் ஜெயக் குமார், காங்கிரஸ் கட்சி இப்ராம்சா, ஓய்வு பெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக துணை மேலாளர் இரா.விவேகானந்தன், நெடுவாசல் அறப்பணிக்குழு தலை வர் பொறியாளர் உ.சொ.ந. சொக்கலிங்கம், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மதுரை சு.பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த சுயமரியாதை சுடரொளி ஆசிரியர் வேலு அவர்க ளின் நினைவுகளை எடுத்துக்கூறி நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் உரை
பேராவூரணி சட்டமன்ற உறுப் பினர் நா. அசோக்குமார் அவர்கள் கலந்துகொண்டு வேலு ஆசிரியரின் படத்தினை திறந்து வைத்து உரை யாற்றினார். அப்போது தன்னு டைய உரையில் தான் எண்ணுகின்ற தான் நினைக்கின்ற அனைத்தையும் தெளிவாக யாருக்கும் பயப்படாமல் தன்னுடைய கருத்துக்களை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லக் கூடியவர் வேலு ஆசிரியர் என்றார்.
விழிக்கொடைக்கான பாராட்டுச் சான்றிதழ்
ஆசிரியர் வேலு அவர்களது கண்கள் தானமாக வழங்கியதை பாராட்டி பேராவூரணி லயன்ஸ் கிளப் சர்பில் பாரட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அச்சான்றி தழினை ஆசிரியர் வேலு அவர்க ளின் வாழ்வினையர் அம்மையார் தமிழ்மணி, மகள் நவேழ்தா ஆகி யோர், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், திராவிடர் கழக பொதுச் செயலா ளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோரது முன்னிலையில் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் சென்னை தொழிலதிபர் ப.சுப்பிரமணியன், கோவை தொழிலதிபர் சு.பாலசுந் தரம், திராவிடர் கழக தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் அத்திபட்டி பெ.வீரை யன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப் பினர் அரு.நல்லதம்பி, இரா.நீலகண்டன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், மாநில இளை ஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனை வர் வே.இராஜவேல், தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் அ.பாலசுப்பிரமணியன், அறந் தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் பா.மகாராஜா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலை வர் சி.ஜெகநாதன், சேதுபாவா சத்திரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பொ.சந்தோஷ்குமார், மதியழகன், வி.ஆத்மநாபன், பேரா வூரணி ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.கவுதமன், பொன்காடு சி.சந்திரமோகன், மாணவர் கழக தோழர் சி.ம.பண்பாளன், பே.தவ மணி, மாவட்ட தொழிலாளர் அணி பொறுப்பாளர் முத்து.துரை ராசன், மதுக்கூர் ஒன்றியம் அண்ணாதுரை, குறிச்சி பழ.வேதாச்சலம், சேதுபாவா சத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சு.வசி, மற்றும் ACE TRUST , திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி,
தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, சன்மார்க்க வள்ளலார் இயக்கம், பகுத்தறிவாளர் கழகம் ஆகிய அனைத்து கட்சி பொறுப்பா ளர்கள் தோழர்கள் மற்றும் ஆசிரியர் வேலு அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்று மறைந்த சுயமரி யாதை சுடரொளி ஆசிரியர் வேலு அவர்களின் நினைவை போற்றி ஒரு மணித்துளி அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
ஒப்பந்ததாரர் அ.இராமநாதன், அ.ம.மு.க. வர்த்தகரணி செயலாளர் வை.சுவாமிநாதன், ஒப்பந்ததாரர் கவிஞர் மு.மோகன் ஆகியோர் படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு இரவு உணவு ஏற்பாடு செய்து வழங்கினர்.
No comments:
Post a Comment