தி.மு.கழகப் பொருளாளரும் - தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களின் மூத்த சகோதரி திருமதி பவுனம்மாள் மறைவு
கழகத் தலைவர் இரங்கல்
அன்னாரது உடல், இன்று (1.2.2023) காலை 11.00 மணி வரை மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலு அவர்களின் இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு, அதன்பின்னர், அவரது சொந்த ஊரான தளிக்கோட்டையில் மாலை 4.00 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
அவர் பிரிவால் வருந்தும் அருமைச் சகோதரர் டி.ஆர். பாலு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை தலைவர்,
1.2.2023 திராவிடர் கழகம்
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மன்னார்குடியிலிருந்த டி.ஆர். பாலு எம்.பி. அவர் களிடம் தொலைபேசி மூலம் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment