சென்னை, பிப். 22- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.
இப்பணிக்கான நேர்காணல் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிப்.28 மற்றும் மார்ச் ஒன்றாம் தேதிகளில் நடைபெறுகிறது. காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை, இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.comஇல் காணலாம். மேலும் 9566239685, 6379179200 மற்றும் 044 - 22505886,22502267 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். செவிலியர் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ‘http://omcmanpower.com/regformnew/registration.php?type=mohform’என்ற இணைப்பில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment