புதுடில்லி, பிப். 27 இந்தியாவில் கரோனா தொற்றால் புதிதாக 218 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நிலவரப்படி பாதிப்பு 214 ஆக இருந்தது. அதன்பிறகு 49 நாட்கள் கழித்து, பாதிப்பு மீண்டும் 200-அய் தாண்டி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து 26.2.2023 அன்று 154 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந் தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 99 ஆக உயர்ந் துள்ளது. தற்போது 2,149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 59 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று சிக்கிமில் ஒருவர் இறந் துள்ளார். கேரளாவில் விடுபட்ட இறப்புகள் 4-அய் கணக்கில் சேர்த்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,769 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில்..
தமிழ்நாட்டில் 12 ஆண்கள் மற்றும் 4 பெண்கள், வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 5 பேருக்கும், சென்னை மற்றும் திருவள்ளூரில் 2 பேருக்கும், மதுரை, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தஞ்சாவூர், வேலூரில் தலா ஒரு வருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று (26.2.2023) எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment