பா.ஜ.க. ஆட்சியை அகற்றியே தீருவோம்! முதலமைச்சர் நிதீஷ்குமார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

பா.ஜ.க. ஆட்சியை அகற்றியே தீருவோம்! முதலமைச்சர் நிதீஷ்குமார்

பாட்னா, பிப்.27 பா.ஜ.கவை அகற்ற எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை நான் மேற் கொண்டு வருகிறேன் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கூறினார்.

பீகார் மாநிலம் புர் னியா பகுதியில் மகா கூட் டணி பொதுக்கூட்டத் தில் அம்மாநில முதல மைச்சர் நிதீஷ்குமார் பேசியதாவது:- பாஜக வுக்கு எதிராக அனை வரும் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் 100 இடங்களுக்குள்ளாக அவர்களைத் தோற் கடிக்க முடியும். காங் கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலில் ஓரணியில் நிற்க வேண் டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். காங்கிரஸ் முடிவில்தான் பா.ஜ.கவின் தோல்வி இருக்கிறது. இந்த வாய்ப்பை காங்கிரஸ் தவறவிட்டால் பா.ஜ.கவின் வெற்றியை நிச்சயம் தடுக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அகற்ற எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். அதில் வெற்றி காண தொடர்ந்து முயல்வேன். ஏனென்றால், நாட்டில் இருந்து துரத்தப்பட வேண்டிய கட்சி பாஜக. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment