தென்காசி, பிப். 21- துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் மாநில அளவில் 2ஆவது இடைத்தை பிடித்து சாதனை படைத்தார். தமிழ்நாடு காவல் துறையில் துணை ஆய்வாளர் களுக்கான தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முதல் 10 இடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சினேகாந்த் என்பவருக்கு பணி நியமன ஆணையை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வழங்கினார்.
சினேகாந்த் மாநில அளவில் 2ஆவது இடமும், தென்மண்டலம் மற்றும் தென்காசி மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திலிருந்து துணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்ட மற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தென்காசி காவல் கண்காணிப்பாளர் சாம்சன் வழங்கினார். அப்போது தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாக பணி நியமன ஆணை பெற்ற சினேகாந்த்துக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். சினேகாந்தின் பெற்றோர் ரவிதாசன்-மகேஸ்வரி. இதில் ரவிதாசன் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.
No comments:
Post a Comment