ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 8.2.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பிற்படுத்தப்பட்டோர் வாக்கினை கவரும் வகையில் அய்தராபாத்தில் மாபெரும் மாநாட்டை மார்ச் 10இல் நடத்திட கே.சந்திரசேகர ராவ் கட்சியான பி.ஆர்.எஸ். முடிவு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது.

தி இந்து:

* திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு கொண்டுவரும் திட்டம் இல்லை என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்.

தி டெலிகிராப்:

* வெளிநாடுகளில் உள்ள ஷெல் நிறுவனங்களில் இருந்து அதானி குழுமத்திற்கு பணம் பாய்ந்தது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என்று மக்களவையில் நரேந்திர மோடி அரசிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். விமான நிலையங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உற்பத்தியில்அதானி குழுமம் முக்கிய பங்கு வகிப்பதை சுட்டிக் காட்டினார்.

* நரேந்திர மோடி அரசாங்கம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே  கிரிமிலேயர் அளவுகோலை நிர்ணயம் செய்யும் வருமான வரம்பினை 2017 முதல் நடைமுறையில் உள்ள ரூ 8 லட்சத்தை மேலும் அதிகரிக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. தற்போதைய குடும்ப உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் என்பது "போதுமானது" என அமைச்சர் பதில்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment