தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
சென்னை,பிப்.2- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பிஎஸ் மாசிலாமணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
பரீட்ச்சார்த்தமாக சமையல் பயன்பாட்டிற்கு பொது விநியோக அங்காடிகளில் தேங்காய் எண்ணெயை வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர்
அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.
அமைச்சர் கூறியது போல், கேரளாவில் சமையல் உள்ளிட்ட வாழ்வியல் பிற தேவைகளுக்கு தேங்காய் எண்ணெய்யை மிகுதியாக பயன்படுத்தி வருகின்றார்கள் என்பது சரியானது. இதனால் எந்தவித உடல் பாதிப்பும் அங்கு இல்லை என்பது காலத்தின் உண்மை. எனவே தமிழ்நாட்டில் இதை விழிப் புணர்வு இயக்கமாக நடத்தி காலப்போக்கில் மற்ற சமையல் எண்ணெய் விற்பனையை நிறுத்தி, தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை கூடுதலாக்கிட வேண்டும்.
மேலும் சத்துணவுக் கூடங்கள், அரசின் விடுதிகளிலும் பயன்படுத்திட நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment