திமுக மருத்துவ அணிக்கு தனி சின்னம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

திமுக மருத்துவ அணிக்கு தனி சின்னம்

 சென்னை, பிப். 16- திமுக மருத்துவ அணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், மாநிலங்களவை உறுப்பினர் அணித்தலைவர் கனிமொழி என்விஎன்.சோமு, இணைச் செயலாளர் அ.சுபேர்கான் ஆகியோர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (15.2.2023) சந்தித்தனர். அப்போது, மருத்துவ அணியின்மாவட்டம் மற்றும் தொகுதிப்பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் முதல்கட்டப் பட்டியல், மருத்துவ அணிக்காக நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் வழங்கினர். இதையடுத்து, மருத்துவ அணிக்கான சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மருத்துவ அணி சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுமாறு முதலமைச்சர் மருத்துவ அணி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.


No comments:

Post a Comment