போட்டி
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று (25.2.2023) நடைபெற்ற குரூப்-2, 2-ஏ தேர்வில் 5,446 பதவிக்கு 55 ஆயிரம் பேர் போட்டி.
சுற்றுலா
உயர்கல்வி வாய்ப்புகளை அறிய, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்துகிறது.
அதிகரிக்க...
மெட்ரோ ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 6 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீரமைப்பு
பல்வேறு வசதிகளுடன் ரூ.7 கோடி மதிப்பில், காட்பாடி ரயில் நிலையம் சீரமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தகவல்.
விசாரணை
கரோனா காலகட்டத்தில் காணொலி வழியாக இந்தியாவில் 64 லட்சம் வழக்குகள் விசாரிக்கப் பட்டுள்ளன. அதில் சென்னை உயர்நீதிமன்றம் மட்டும் 40 லட்சம் வழக்குகளை விசாரித்து உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தகவல்.
சோதனை
சென்னை முழுவதும் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனையை காவல்துறையினர் நேற்று தொடங்கினர். சோதனையின் போது, விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment