மகாராட்டிரா, குஜராத், அரியானா, புதுச் சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த ஜி 20 மாநாடுகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதமரின் படத்தைப் போட்டு விளம் பரப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடந்த ஜி 20 மாநாட்டில் தமிழ் நாடு அரசு சின்னம், தமிழ்நாடு முதலமைச்சர் படம் எங்கும் இல்லை. நாளிதழ்களிலும் விளம்ப ரம் தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு முழுமையாக முயற்சி செய்து நடத்திய உலக சதுரங்கப் போட்டிகளின் விளம்பரங்களில் மோடி படத்தை ஸ்டிக்கர் போட்டு ஒட்டிய சங்கிகளின் செயல்பாடுகள் அனை வரும் அறிந்ததே.
இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில் திமுக தலைமை, தொண்டர்களை அமைதிப்படுத்தியது. தமிழ்நாடு முதலமைச்சரின் பெயரை உச்சரிக்காமல், அவரின் உழைப்பை பெருமைப்படுத்தாமல் தமிழ்நாட்டில் எந்த நிகழ்வும் நடத்த முடியாது என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக ஜி 20 மாநாட்டில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் 'நான் முதல்வன்' தலைசிறந்த கல்வித்திட்டமாக அங்கீ கரிக்கப்பட்டு அந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல ஒன்றிய கல்வித்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளார்.
இதன் மூலம் இங் குள்ள பாஜகவினர் முதலமைச்சர் படத்தை பயன்படுத்தாவிட்டாலும் தமிழ்நாட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் முத லமைச்சரின் திட்டங்கள் ஒன்றிய அரசாலும் பெருமைப் பட பாராட்டும் திட்டமாக அமைந்துள்ளது. பூனை கண்ணைமூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்ற பாஜகவினரின் நினைப்பில் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சரகமே மண் ணைப் போட்டுவிட்டது.
தமிழ்நாடு என்றாலே ஓரவரஞ்சனைக் கண்ணா டியைப் போட்டுக்கொண்டு பார்க்கும் சிறுமைக்குணம் 140 கோடி மக்கள் திர ளைக் கொண்ட ஒரு துணைக் கண்டத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருப் பது அழகல்ல.
எதற்கெடுத்தாலும் ஒன்றிய செயல்பாடுகளை தமிழ்நாடு எதிர்க்கிறதே என்று பொத்தாம் பொது வில் சங்கிகள் பேசுவ துண்டு.
அந்த சங்கிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? மற்ற மற்ற மாநிலங்களில் ஜி-20 மாநாடுகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சின்னம், முத லமைச்சர்களின் படங்கள் இடம்பெற்றிருக்கும்போது, தமிழ்நாட்டில் நடந்த ஜி-20 மாநாட்டில் மட்டும் அவை இடம்பெறாதது ஏன்? ஏன்?
- மயிலாடன்
No comments:
Post a Comment