சுற்றுச் சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 12, 2023

சுற்றுச் சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்

சென்னை, பிப். 12- போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச் சூழலைக் காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத் துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்க போக்குவரத்து ஊழி யர் சங்கங்களின் சம்மேளனம், பூவுலகின் நண்பர்கள் ஆகியோ ருடன் திராவிடர் கழகமும் இணைந்து மினி மாரத்தான் போட்டிகள் தமிழ்நாடு முழுவ தும் சென்னை உள்பட 20 நகரங்களில் இன்று (12.2.2023) நடைபெற்றது.

இதில் சென்னை பெசன்ட்நகர் நிழற் சாலையில் தொடங்கிய மினி மராத்தான், அடையாறு பாலம் வழியாக பெசன்ட் நகர் கடற்கரையை வந்து அடைந்தது. நடைபெற்ற மினி மாரத்தானில் பங்கேற்ற வீரர்களை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாரத்தான் வீரர் மா.சுப்பிர மணியன் தொடக்கத்திலேயே வந்து ஊக்கப்படுத்தினார். காலை 6.30 மணிக்கு சி.அய்.டி.யு மாநி லத் தலைவர் அ.சவுந்தரராஜன் மகளிர் மாரத்தான் போட் டியை தொடங்கி வைத்தார். பூவுலகின் நண்பர்கள் அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் பொறி யாளர் கோ.சுந்தர் ராஜன் ஆட வர்களுக்கான போட்டியைத் தொடங்கி வைத்தார். 

திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாண வர் கழக மாநில அமைப்பாளர் செந்தூர் பாண்டியன், ஆவடி மாவட்ட மாணவர் கழக தலைவர் அறிவுமதி, பெரியார் வீர விளையாட்டுக் கழகம் பார்த்திபன், அறிவுச்செல்வன், ராஜராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பெசண்ட் நகர் எல்லியட்ஸ் கடற்கரையையொட்டி அமைக்கப்பட்டிருந்த மேடை யில் பரிசளிப்பு விழா நடை பெற்றது. வெற்றி பெற்றோருக் கான பரிசுகளை அ.சவுந்தர ராஜன், கோ.சுந்தரராஜன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பா ளர்கள் வழங்கினர்.

No comments:

Post a Comment