சென்னை, பிப்.28- தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர் களுக்கு நேற்று (27.2.2023) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திமுகவின் உடன்பிறப்பாக, மக்களுக்கான தொண்டனாக, உங்களில் ஒருவனாக என் பொதுவாழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறேன். நெருக்கடிநிலைக் கால மிசா சிறைவாசமும், சித்திரவதை களும் எனக்கு வெறும் தழும்புக ளல்ல. பொதுவாழ்க்கையில் முதன் முதலாக கிடைத்த பரிசுகள் பதக்கங்கள். இளைஞரணிச் செய லாளர் பொறுப்பு என்பது பதவியல்ல, திமுக எனக்குத் தந்த பாடத் திட்டம். அதனை நல்ல முறையில் தொடர்ந்து பயின்று, கலைஞர் வைத்த தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெற்றேன். பகுதி பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் எனக் திமுகவிற்காக தொடர்ந்து உழைத்து, படிப்படியாக உயர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என வளர்ந்து, திமுக தலைவர் என்ற பொறுப்பினை உங்கள் அன்பாலும் ஆதரவாலும் சுமந்தி ருக்கிறேன்.
ஒரு வாய்ப்பு என்பதைத் தவிர...
என்னுடைய 70ஆவது பிறந்த நாள் என்பது அதற்கான ஒருங்கி ணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதைத் தவிர, வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப் போதல்ல, இளைஞரணிச் செயலா ளராக இருந்த போதிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருகி றேன். எளிமையான முறையில் திமுகவின் இருவண்ணக் கொடியை ஏற்றி, அய்ம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை, எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், திமுக மூத்த முன்னோ டிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும்.
அரை நூற்றாண்டு காலம்...
திமுகவினர் எது செய்தாலும், துரும்பைத் தூணாக்கி விமர்சனங்க ளுக்குக் காத்திருக்கும் எதிர்த்தரப்பி னருக்கு கொஞ்சமும் இடம்தராமல் எளிய முறையில் நிகழ்வுகளை நடத்திட வேண்டும். திமுக தலைவர் என்ற முறையில் தான் என்னுடைய பிறந்தநாள் விழா வுக்கு உடன்பிறப்புகளாகிய உங்க ளுக்கு இந்தளவில் அனுமதி வழங் குகிறேன். அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய கலைஞர் பிறந்த நாள் விழா என்றால் இந்தி யாவே அதனை கவனிக்கும். அவரது பிறந்த நாளான ஜூன் 3ம் நாள் மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டம், ஏடுகளின் தலைப்புச் செய்தியாக மாறும். தென்சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் தலைவரின் பிறந் தநாள் விழாவை எத்தனை சீரும் சிறப்புமாக நடத்துவார் என்பதை இப்போதும் எண்ணிப் பார்க் கிறேன்.
நெஞ்சிலே எத்தனையோ நினைவலைகள். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை இயற்கை நம்மிடமிருந்து பிரித்தபிறகு, திமுக வின் தலைமைப் பொறுப்பு என் தோளில் சுமத்தப்பட்டிருக்கும் சூழலில், திமுக எனும் பேரியக்கத் தின் அரசியல் நிலைப்பாட்டினை இந்திய அளவிலான தலைவர்கள் அறிந்து கொள்ள நினைப்பதும், ஆதரவாக நிற்பதும் இயல்புதான்.
பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
அந்த வகையில், சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணி யன் ஏற்பாட்டில் மார்ச் 1ஆம் தேதி அன்று மாலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். திமுக பொருளாளர், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார்.
சிறப்புமிக்க அந்தப் பொதுக் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவ ருமான பரூக் அப்துல்லா, உத்தர பிரதேச மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் மாநில துணை முதலமைச்சரும், ராஷ்ட் ரீய ஜனதா தளக் கட்சித் தலைவரு மான தேஜஸ்வி யாதவ் என இந்திய அளவிலான தலைவர்கள் உரை யாற்றுகிறார்கள். நாட்டின் ஒற்று மையையும், பன்முகத்தன்மையை யும், அரசியல் சாசனம் வழங்கி யுள்ள ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப் புடன் அதற்கான எதிர்காலச் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் நான் ஏற்புரையாற்றுகிறேன். மா.சுப்பிர மணியன் நன்றியுரை ஆற்றுகிறார்.
உங்களில் ஒருவனான என்னு டைய 70வது பிறந்தநாளில் திமுக உடன்பிறப்புகளான உங்கள் ஒவ் வொருவரின் அன்பான வாழ்த்துக ளையும் மனம் உவந்து ஏற்றுக் கொள்வதுடன், திராவிடக் கருத்தி யலின் அடிப்படை நோக்கங்களான சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமை இவற்றைத் தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்திய ஒன்றிய அளவில் நிலைநாட்டிடும் ஜனநாயக அறப்பணியில் நாம் அனைவரும் இணைந்து நின்று, தொடர்ந்து உழைத்திட வேண்டும் என விரும்புகிறேன். நம்முடன் கொள்கைத் தோழமை கொண் டுள்ள இயக்கங்களுடன் ஒருங்கி ணைந்து செயல்படுவோம்.
‘தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்று வோம்’ என்பதே உங்களில் ஒருவ னான உங்களின் முதன்மைத் தொண்டனான என்னுடைய பிறந் தநாள் செய்தி. அதற்கேற்ப அய ராது உழைத்திட ஆயத்தமாக இருக்கிறேன். லட்சிய உணர்வு கொண்ட உடன்பிறப்புகளின் ஒத் துழைப்பையே சிறந்த வாழ்த்துக ளாகக் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment