ஜெயங்கொண்டம், பிப். 16- பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டத்தில் 10.02.2023 அன்று மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சோ.கா கண்ணன், ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், ஜெயங் கொண்டம் நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணா நிதி, திராவிடர் கழகப்பொறுப்பாளர் சி.காமராஜ் மற்றும் பள்ளி முதல் வர் முனைவர் சசீதா ஆகியோரின் முன்னிலையில் இம்மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் "மழலையர்கள் வளராத செடியின் மலராத மொட்டு, தழைக்காத பருவம். சளைக்காத உருவம், உரைக்குது பாடம், தடையேது செயலாற்ற தளிராக இருந்தாலும், மனவுறுதி இருப்பின் மலையும் கடுகுதான், மழலையின் ஆற்றலை.மனதாரப் போற்றுவோம்" என்பதற்கு இணங்க வரவேற்பு நடனத்துடன் விழா தொடங்கியது. மாணவர் களும் தமது தனித்திறமைகளை மிக சிறப்பாக வெளிக்கொணர்ந் தனர். மழலையர்களின் செயல்பாடு களை கண்டு பெற்றோர்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு சிறப்புவிருத்தினர்கள் மழலைய ருக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி எந்த கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் காணாத சிறப் பையும் ஒழுக்கத்தையும் நிகழ்ச்சி களையும் இப்பள்ளியில் கண்டேன் என்று கூறி வாழ்த்துகளை தெரிவித்தனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment