சென்னை, பிப். 16- சென் னையில் பேருந்து, புற நகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்தி லும் பயணம் செய்ய ஒரே பயணச் சீட்டு முறையை கொண்டு வரும் திட்டம் இறுதிக்கட்ட ஆலோச னையில் உள்ளது.
சென்னையில் பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத் தின் முதல் கூட்டத்தில் சென்னை முழுவதும் பொதுப் போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே பயணச் சீட்டு அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத் தும் பணிகள் தொடங் கப்பட்டது. குறிப்பாக இதற்கு தனியாக செயலி ஒன்று உருவாக்கப்பட வுள்ளது. இந்தச் செயலி யில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு எத்தனை போக்குவரத்து முறை களில் பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்த முறையின் அடிப்படை யில் பயணத்தின் மொத்த தொகை எவ்வளவு என்பது தெரியவரும். அதற்கான தொகையை செலுத்தி பயணச் சீட் டைப் பெற்றுக் கொள் ளலாம். இந்த பயணச் சீட்டு மூலம் நீங்கள் தேர்வு செய்த பொது போக்குவரத்து முறை களில் பயணம் செய்ய லாம் இந்நிலையில், இதற் கான இறுதிகட்ட பணி களை தொடங்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment