சென்னை, பிப்.2 நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (31.1.2023) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று (1.2.2023) ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாட்டின் 2023-_2024ஆம் ஆண்டிற் கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த ஆட்சியின் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும். இதனிடையே ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை தோப்பூர் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட் ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களான திடீரென செங்கல்லை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக கையில் எய்ம்ஸ் என்ற எழுத்துக்கள் எழுதப்பட்ட செங்கல்லை ஏந்தி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களான கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், விஜய் வசந்த், செல்லக்குமார், ஞானதிரவியம், நவாஸ் கனி உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீரென செங்கல்லை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment