உலகப் புற்றுநோய் தினம் விழிப்புணர்வு பேரணி - நாடகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

உலகப் புற்றுநோய் தினம் விழிப்புணர்வு பேரணி - நாடகம்

சென்னை, பிப்.5 இன்று உலகமெங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் ‌புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு ஆண்டும் 1 சதவிகிதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த புற்றுநோயின் தாக்குதல், தற்போது 90 முதல்100 பேராக அதிகரித் துள்ளது. சரியான விழிப்புணர்வு, சீரான பழக்க வழக்கம் இருந்தால் புற்றுநோயைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். 

தற்போது உள்ள மருத்துவ முன்னேற்றத் தில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனை முற்றிலுமாக குணப்படுத்தலாம். உரிய நேரத்தில் சரியாக சிகிச்சை பெறும் 100இல் 65 சதவிகிதம் பேர் காப்பாற்றப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. உடல் கோளாறுகளின் அறிகுறியை அலட்சியம் செய்யாமல், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது. புகைபிடித்தல், தவறான உணவுப் பழக்கம், குடும்ப வழியாக வரும் பாதிப்பு என புற்றுநோய்க்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும், சரியான விழிப்புணர்வு, முறையான மருத்துவ ஆலோசனை இருந் தால் புற்றுநோயை வெல்லலாம் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.


No comments:

Post a Comment