தமிழ்நாடு மாணவர் கண்டுப்பிடிப்பாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

தமிழ்நாடு மாணவர் கண்டுப்பிடிப்பாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வல்லம், பிப். 1- தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல மய்யமான அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான போட்டி- விழிப்புணர்வு நிகழ்ச்சி வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 27.01.2023 அன்று அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.தமிழ்ச் செல்வம், மய்ய ஒருங்கிணைப் பாளர் பி.செல்வகுமார் ஆகி யோரின் ஏற்பாட்டில் நடை பெற்றது. 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய இப்பாலிடெக்னிக் கல் லூரியின் முதல்வர் டாக்டர் இரா. மல்லிகா, தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து மாணவர்கள் பயன்பெற பல போட்டிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்று கூறிய அவர்  இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி மாணவர்கள் வாழ்க்கையில் தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மய்ய கள ஒருங்கிணைப்பாளர் ஆர்.அமர்நாத் மாணவர்களுக்கு புத்தாக்க அறிவை தூண்டும் விதமாக உரை யாற்றி விழிப்புணர்வை ஏற் படுத்தினார்.

இக்கல்லூரியின் மேனாள் மாணவரும் இந்நாள் தொழில்முனைவோரும் ஆகிய ஆர்.அண்ணாத்துரை. ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆகி பெருமை மிகு நிறுவனத்தின் தலைவர் என்ற நிலையை அடைந்து அவற்றோடு நின்றுவிடாமல் தனது அனுபவங்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டு, அதன்மூலம் எவ் வாறு வெற்றிகரமான தொழில் முனைவோராக ஆவது  எப் படி? என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்,

இந்நிகழ்ச்சியில் தஞ்சா வூர் மாவட்ட அளவில் 101 மாணவர்களும் 13 பேராசிரி யர்களும் பல்வேறு பாலி டெக்னக் கல்லூரிகளிலிருந்து கலந்து கொண்டனர். 

முன்னதாக இக்கல்லூரி யின் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசி ரியர் தி.விஜயலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார். இப் பாலிடெக்னிக் பேராசிரியர் கே.கோபி நன்றியுரை ஆற்ற விழா நிறைவுற்றது.

No comments:

Post a Comment