தமிழர் தலைவர் பரப்புரைப் பயணம் குமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

தமிழர் தலைவர் பரப்புரைப் பயணம் குமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில், பிப். 22- தமிழர் தலைவர்  ஆசிரியர் பங்கேற்கும்  நாகர் கோவில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாட்டு பணியில் குமரிமாவட்ட தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

நாகர்கோவில் பெரியார் மய் யத்தில் குமரிமாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு. சுப்பிரமணி யம் தலைமையில் நடந்த தமிழர் தலைவர் பங்கேற்கும்  கூட்ட ஏற் பாட்டு பணிகளுக்கான ஆலோச னைக் கூட்டத்திற்கு     மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன்  முன்னிலை வகித்தார்.

 சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டத்தில்  திரா விடர்கழக தலைவர்  கி. வீரமணி அவர்கள் (பிப்ரவரி 24  வெள்ளி மாலை 4.30 மணிக்கு ) நாகர்கோவில்  அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பாக உரையாற்றுகிறார். நாகர்கோவில் மாநகருக்கு வருகை தரும் கழக தலைவருக்கு அன்று பகல் 11.30  மணியளவில்  குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார் பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அரசு  விருந்தினர் மாளிகை முன்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது.  அன்று மாலை நடக்கும்  பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக மாநில பொறுப்பாளர்கள் , திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட்,  ம.தி.மு.க, விசிக, மனிதநேய மக்கள் கட்சி , தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிட நட்புக்கழகம் இவற்றின் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கின்ற னர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை குமரி மாவட்ட  தோழர்கள் விரைவாக செய்து வருகின்றனர். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட திக துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட திக இளை ஞரணி செயலாளர் இரா.இரா ஜேஷ், மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது ஆகி யோர் ஏற்பாட்டு பணியின் போது  உடனிருந்தனர்.

No comments:

Post a Comment