அதானி நிறுவனத்தின் மோசடி ஒன்றிய அமைச்சர் என்ன சொல்கிறார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

அதானி நிறுவனத்தின் மோசடி ஒன்றிய அமைச்சர் என்ன சொல்கிறார்?

புதுடில்லி, பிப்.6 அதானி விவ காரத்தில் அரசு செய்வதற்கு ஒன்று மில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரஹ் லாத ஜோஷி தெரிவித்துள்ளார். தேசிய மயமாக்கப்பட்டா வங்கி களில் உள்ள பொதுமக்கள் பணத்தை கடனாகப் பெற்று பங்கு வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட் டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து இந்தக் குற்றச் சாட்டை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று சவடால் விட்ட அதானி நிறுவனம் ஒருவாரமாக அதற்கான முகாந்திரம் இல்லாமல் திணறி வருவதை அடுத்து அதன் பங்கு களின் மதிப்பு சந்தையில் குறைந்து வருவதோடு சொத்து மதிப்பும் சரிந்து வருகிறது. இந்த நிலையில் அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்து பொதுமக்கள் பணத்தை ஒன்றிய அரசு காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதானி விவ காரம் நாடாளுமன்றத்திலும் எதி ரொலித்த நிலையில் நாடாளுமன் றத்தின் இருஅவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ப்ரஹலாத் ஜோஷி “அதானி விவ காரத்தில் ஒன்றிய அரசு செய்வ தற்கு ஒன்றுமில்லை. இந்த விவ காரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அமளியில் ஈடு படுகின்றன" என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment