ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் மதவாத, சனாதனத்திற்கு எதிராக உள்ள கட்சித் தலைவர்களை ஒருங் கிணைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்களா?

- தி.ஆறுமுகம், உத்திரமேரூர்

பதில் 1: இப்போதுள்ள சூழ்நிலையில் எனது பங்குக்கு எவ்வளவு, எப்படி, எந்த அளவு முடியுமோ அதனைச் செய்வது உறுதி!

---

கேள்வி 2: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாக அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி கூறினார்; அதே கருத்தினை இன்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனும் தெரிவித்துள்ளாரே, இதுகுறித்து தங்களின் கருத்து?

-மன்னை சித்து, மன்னார்குடி

பதில் 2: இதற்கு ஏற்கெனவே பதில் அளித்து 'விடுதலை'யில் வந்துள்ளது. அதனைப் பாருங்கள்.

---

கேள்வி 3: இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கிறார்கள் காவல் துறையினர். அதேபோல், அரசின் அனைத்து சட்ட விதிகளையும் கடைப் பிடிக்கிறார்களா? உதாரணத்திற்கு சாலையில் மாடுகள் திரிந்தால் கண்டுகொள்வதில்லையே, ஏன்?

-பா.முகிலன், சென்னை-14

பதில் 3: சட்டம் எல்லோருக்கும் எல்லா காலத் திலும் ஒன்றுதான்; கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப் பட வேண்டும். பசுத்தாயை அரவணைக்க திட்டமிட்டோரே இதற்கும் அரவணைத்து அப்புறப்படுத்த முன் வந்தால் நாம் நன்றி கூறுவோம் - அவர்களுக்கு!

---

கேள்வி 4: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் தரக் குறைவாகப் பேசியுள்ளது எதைக் காட்டுகிறது?

- கி.இராமலிங்கம், செம்பியம்

பதில் 4: அவரது தோல்வி பயத்தின் ஆழத்தையும், உச்சத்தையும் சேர்த்தே காட்டுகிறது!

---

கேள்வி 5: தாங்கள் மேற்கொண்டுள்ள தொடர் பரப்புரைப் பயணத்தின்போது சந்திக்கும் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

- லோ.ஜெகதீஷ், வேலூர்

பதில் 5: மிகப் பெரும் ஆதரவு; பலதரப் பட்டவர்களின் ஒத்துழைப்பு - ஒரு பெரும் மக்களின் ஆதரவுடனே - இளைஞர்களும் போராட்டங்களுக்கு ஆயத்தமாவதை நம் மிடமே தெரிவிக்கின்றனர்!

---

கேள்வி 6:  உலகப் பணக்காரர்களின் வரிசையில் அதானியின் பின்ன டைவு குறித்து...?

- இரா.செல்வம்,  வாழப்பாடி

பதில் 6: கவலைப்பட வேண்டி யவர்கள் பணம் போட்டு பங்கு வாங்கியவர்கள். மக்களைவிட பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப் பினரே அதிகமாகும்.

---

கேள்வி 7: தி.மு.க.விற்குத் தாய்க் கழகம் திராவிடர் கழகம்; ஆனால், தி.மு.க.வில்தான் மூடநம்பிக்கைப் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்களே...?

- கே.கனியமுது, கன்னியாகுமரி

பதில் 7: திருத்துவது நமது நிதானமான தொடர் பணிகளில் முக்கியமானது!

---

கேள்வி 8: அ.தி.மு.க.வின் கோஷ்டி பூசல் தற்போது அமைதி காப்பது ஏன்?

- ச.சஞ்சய்குமார், விழுப்புரம்

பதில் 8: அவர்கள்  His Master's Voice - குரலுக்கு ஏற்ப செயல்படுபவர்கள்; அதன்படியே  அவர்தம் செயல்கள் அனைத்தும் அக்கட்சியின் 4 பிரிவுகளுக்கும் 'லேடி' தலைவராக இல்லையே - 'மோடி'தான் என்று காட்டிக்கொள்ளும் வண்ணமே உள்ளது. வேதனை; வெட்கம்!

---

கேள்வி 9:  சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கோவிலில் இருந்த நடிகர் மயில்சாமி, மரணத்தைத் தழுவியது குறித்து, சிலர் "சிவன் கூட்டிச் சென்றுவிட்டார்" என்றெல்லாம் கூறியுள்ள நிலையில், தங்களது கருத்து என்ன?

- லோ. விஜயலட்சுமி, பெங்களூரு

பதில் 9: அவ்வளவு மனிதாபிமானமற்றவனா சிவன்? அட மூளைகெட்ட மனிதர்களே!

---

கேள்வி 10: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை எல்லாம் இன்னும் குறைக்கப்படாமல், அதே நிலைமை நீடிக்கிறதே?

- வே.வேலு,  வந்தவாசி

பதில் 10: மேலும் உயர்ந்தால் அதிசயப்படாதீர்கள்!


No comments:

Post a Comment