நிதிஷ்குமார் திட்டவட்டம்
பாட்னா, பிப்.1 உயிரே போனாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட் டோம் என்று நிதிஷ்குமார் திட்டவட்ட பதிலாகக் கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள் விக்கு, அதைக் காட்டிலும் இறந்து போவது மேலானது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் தான் அரசியல் காழ்ப்புணர்ச்சி கார ணமாக பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி மீது பொய் வழக்குகளை தொடுத்து வருகின்றனர். இனி பாஜகவுடன் கூட்டணி என்பதைக் காட்டிலும் அதை விட உயிர்துறப்பது எவ்வளவோ மேலானது. நாடாளு மன்றத் தேர்தலில் பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜக தலைவர்கள் கூறுவது முற்றி லும் கேலிக்கூத்தானது. இவ்வாறு முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment