சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நகர மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆலடி எழில்வாணன் தமிழர் தலைவருக்கு தந்தை பெரியார் உருவம் பதித்த நினைவுப் பரிசை வழங்கினார். திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனுக்கு தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரன் பயனாடை அணிவித்து வரவேற்றார். சேத்தூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் இல.திருப்பதி, பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: சிவகுமார், கோவிந்தன். (25.2.2023)
சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கே.டி.சி. குருசாமி பயனாடை அணிவித்து வரவேற்றார். விருதுநகர் மாவட்டத் தலைவர் இராசபாளையம் இல. திருப்பதி, மாவட்ட செயலாளர் பழக்கடை கோவிந்தன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (25.2.2023)
சேத்தூரில் நடைபெற்ற 'சமூகநீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்கப் பரப்புரை தொடர் பயண பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்தோர் (25.2.2023)
No comments:
Post a Comment