நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டி லேயே கேரளத்துக்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருப்பதாக தேசியத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் 22.3 விழுக்காட்டினர்நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அகச் சுரப்பி பாதிப்புகளில் முக்கியமானதாக உள்ள நீரிழிவு நோய்க்கு நாடு முழுவதும் 19 கோடிக்கும் மேற்பட்டோர் ஆளாகி யுள்ளனர்.
நீரிழிவு நோயைப் பொருத்தவரை உலகின் தலை நகராக இந்தியா உருவெடுத் துள்ளது.கடந்த நிதியாண்டு தரவுகளை ஆய்வு செய்யும்போது நாட்டின் மக்கள் தொகையில் 14.7 விழுக்காட்டினருக்கு ரத்த நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது.
ரத்தத்தில் குளுக்கோஸ் விகிதம் தொடர்ந்து 140 எம்ஜி/டிஎல் என்ற அளவுக்கு அதிகமாக இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே நீரிழிவு நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது.
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத் தில் 27.4 விழுக்காட்டினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழ்நாட்டில் 22.3 விழுக்காட்டினரும், ஆந்திரத்தில் 21.1 விழுக்காட்டினரும் அந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். யூனியன் பிரதேசங்களில் கோவாவில் 22.7 விழுக் காட்டினருக்கும், புதுச்சேரியில் 22 விழுக் காட்டினருக்கும், லட்சத்தீவுகளில் 21.9 விழுக்காட்டினருக்கும் நீரிழிவு நோய் உள்ளது.
அதேவேளையில் வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், டில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தர கண்ட் உள் ளிட்ட மாநிலங்களில் 12 விழுக்காட்டுக்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது.
தென்னிந்தியாவின் உணவுப் பழக்க வழக்கமும், அதுசார்ந்த மரபணுவும் நீரிழிவு நோய் பாதிப்பு அதிக ரிப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது. அதே போன்று உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவையும் முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment