சென்னை, பிப்.13 இளநிலை பட்டப் படிப்பு களுக்கான பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வியை இணைப்பது குறித்த வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இள நிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் சுற்றுச் சூழல் கல்வியை சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்து கிறது. அதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் கல்வியை, இளநிலை பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்டத்தின் ஒருங் கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த அவசியத்தை ஏற்படுத்த முடியும். இந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கை மற்றும் பாடத் திட்டம், யுஜிசி சார்பில் வடிவமைக்கப்பட்டு வெளி யிடப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மற்றும் புதிய பாடத்திட்ட கட்டமைப்பு குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளை லீttஜீs://uணீனீஜீ.uரீநீ.ணீநீ.வீஸீ என்ற இணையதளம் வாயிலாக பிப்.22-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். கூடுதல் விவரங் களை யுஜிசி வலைதளத்தில் (லீttஜீs://ஷ்ஷ்ஷ்.uரீநீ.ணீநீ.வீஸீ/) அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment