தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக் கூட்டம்: மன்னையில் எழுச்சியுடன் நடத்த முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 12, 2023

தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக் கூட்டம்: மன்னையில் எழுச்சியுடன் நடத்த முடிவு


மன்னை, பிப். 12- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மார்ச் 4ஆம் தேதி பங்கேற்கும் சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்தினை மன்னார்குடி மாவட்டத்தின் சார்பில் மிக எழுச்சியோடு மாநாடு போல நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் 1.2.2023 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது 

இக்கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்றார், தஞ்சை மண்டலத்  தலைவர் மு.அய்யனார் முன்னிலையேற்றார், மன்னை நகர செயலாளர் மு.ராமதாஸ்  வரவேற்று உரையாற்றினார், 

பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடக்க உரையில், தமிழ்நாட்டில் ஆசிரியருடைய பயணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, இக்காலகட்டத்தில் அந்தப் பயணத்தினுடைய நோக்கம், பொதுக்கூட்டத்தை எப்படி எழுச்சி யோடு நடத்துவது , எந்தப் பணிகளில் அதிக முக்கியத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும், எதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும், இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த பொதுக்கூட் டத்தின் அவசியம் எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும். ஆசிரியர் அவர்கள் 90 வயதிலும் எவ்வளவு உற்சாகமாக எழுச்சியோடு பயணிக்கிறார் என்பதனை எல்லாம் மிகவும் உணர்ச்சியோடு எடுத்துக் கூறி இந்த பொதுக்கூட்டத்தினை மிகச் சிறப்பாக நடத்துங்கள் என்று தொடக்க உரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் நீடாமங்கலம் பா.சிவஞானம், மன்னார்குடி ஒன்றிய கழகத்தலைவர் மு தமிழ்ச்செல்வம், பகுத்தறிவு ஆசிரியரணியின் மாவட்டத்தலைவர் தங்க.வீரமணி, நகரத் தலைவர் எஸ்.என்.உத்திராபதி கருவாக்குறிச்சி. தங்க.பிச்சைகண்ணு,  மாவட்டத்துணைத்தலைவர் ந.இன்பக்கடல், பகுத்தறிவாளர் கழகப் பேராசிரியர் இரா.காமராசு, ப.க. மாவட்டத்தலைவர் வை.கவுதமன், கழக ஒன்றியச்செயலாளர் கா.செல்வராஜ், ப.க. நகரத்தலைவர் கோவி.அழகிரி, மன்னை நகர. அமைப்பாளர் மு.சந்திரபோஸ், எடமேலையூர் லட்சுமணன், நீடாமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் பி.வீராசாமி கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எம்.பி. குமார், மாவட்ட துணைச் செயலாளர் வி.புட்பநாதன், மன்னார்குடி நகர இளைஞர் அணித்தலைவர் மா.மணிகண்டன், ப.க.பொறுப்பாளர் காமராசு,  ப.க. பொறுப்பாளர் ச.அறிவானந்தம், மாவட்ட இளைஞரணி தலைவர் க.ராஜேஷ் கண்ணன், நீடாமங்கலம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் வா.சரவணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சே.சுருளிராஜன், மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் மன்னை.சித்து மன்னை நகர துணை தலைவர் வே.அழகேசன், ஒன்றிய துணை செயலாளர் கவிஞர் கோ.செல்வம், ப.க. பொறுப்பாளர் ச.முரளிதரன் ,இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சா.அய்யப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மேலவாசல் பி.இளங்கோவன் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் இரா.சக்திவேல் மண்டல இளைஞர் அணி செயலாளர் வே.ராஜவேல், பகுத் தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட கழகச் செயலாளர் கோ.கணேசன், மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மண்டலத் தலைவர் மு.அய்யனார், ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். 

இறுதியில் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் நிறைவுரையாற்றினார். மன்னார்குடி மாவட்ட இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் செ.ரகுவரன் நன்றி கூறினார்.    

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1:: 

இரங்கல் தீர்மானம்:

பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொருளாளர் நெடுவாசல் சி.வேலு மறைவிற்கும், பட்டுக்கோட்டை மாவட்ட துணை தலைவர் சி.சின்னக்கண்ணு, மேலவாசல் கிளைக் கழக தலைவர் குணசேகரனின் வாழ்விணையர் வாசுகி,  புலவர் கோ.செல்வத்தின் தாயார் யமுனாம்பாள் ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப்ரவரி 3 முதல் மார்ச் 10 வரை ஈரோடு தொடங்கி கடலூர் வரை மேற்கொள்ளும் சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டத்தினை மார்ச் 4ஆம் தேதி  மன்னார்குடியில் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய திராவிடர்கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3:

மன்னார்குடியில் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப்பொதுக் கூட்டத்தினை மிகச் சிறப்பாக நடத்திடும் வகையில்  நகரமெங்கும்  கழக லட்சிய கொடியினை நட்டும் ,மாவட்டம் முழுவதும் சுவரொட்டியினை ஒட்டியும், சுவரெழுத்துப்பிரச்சாரம் செய்தும், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் ஆட்டோ விளம்பரங்கள் செய்தும்,  கடைவீதி வசூல் என அனைத்து பிரச்சார பணிகளிலும் கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் இணைந்து மிகச் சிறப்பாக நடத்துவது எனவும் ,மன்னார்குடிக்கு வருகை தரும் தமிழர்தலைவருக்கு மிக எழுச்சியான வரவேற்பினை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. 

கூட்டத்தில் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் : 

நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் கருவாக்குறிச்சி. தங்கல் பிச்சைக்கண்ணு, நீடா. ஒன்றியச் செயலாளர் ச.அய்யப்பன், நீடா.ஒன்றிய அமைப்பாளர் மா.பொன்னுசாமி, ஒன்றிய துணைத்தலைவர் பி.வீராசாமி,  இரா.சக்திவேல், கோட்டூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தலைவர் சி.ராமலிங்கம், ஒன்றிய .ப.க செயலாளர் .வே.வினோத் , ஆகியோர் நியமிக்கப்பட் டனர். சமூகநீதி பாதுகாப்பு திராவிடல் மாடல் விளக்கப் பரப்புரை பயண பொதுக் கூட்ட கடைவீதி வசூல் பொறுப்பாளர்கள்:     

1 ) வீ.புட்பநாதன், 2). எம்.பி.குமார், 3)மேலவாசல் இளங்கோவன், 4)மா.மணிகண்டன், 5)க.ராஜேஷ்கண்ணன், 6) சே.சுருளி, 7)க.சேகர், 8 ) தா.சரவணன், 9) ச.அய்யப்பன், 10).செ.இரகுவரன். ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment