புதுமைப் பெண் திட்டத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

புதுமைப் பெண் திட்டத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் தேர்வு

திருச்சி, பிப். 16- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட் டத்தில் 08.02.2023 அன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மூவலுர் ராமாமிர்தம் அம்மையார்  உயர்கல்வி திட்டத் தின் கீழ் அரசு பள்ளிகளில்  6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000-_- உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் 2ஆம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு பெரியார் மருந்தியல் கல்லூரி இளநிலை மருந்தியல் முதலாம் ஆண்டு மாணவி எஸ். செந்தமிழ் கொடிக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000/-_உதவித்தொகை பெறுவதற்கான வங்கி டெபிட் கார்டினை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் புதுமைப் பெண் திட்டத்தில் தேர்வு பெற்ற திருச்சி மாவட்டத் திலுள்ள கல்லூரி மாணவிகள் பலர் பங்கு கொண் டனர். 

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் 6 பேர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment