ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 27.2.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் மல்லிகார்ஜூன கார்கே, அகிலேஷ் இருவரும் கலந்து கொள்வது எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைப்பில் தி.மு.க.வின் முயற்சிக்கு கூடுதல் பலமாக அமையும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கரன்சி நோட்டுகளில் காந்தியாரின் படத்தை நீக்கி விட்டு, சாவர்க்கர் படம் வைக்க வேண்டுமாம், அத்துடன் நாடாளுமன்ற வளாகத்துக்கு செல்லும் சாலைக்கு சாவர்க்கர் பெயரை மாற்ற வேண்டும் என  ஹிந்து மகாசபை மோடி அரசுக்கு கடிதம் எழுதி யுள்ளார்.

* அய்க்கிய முற்போக்கு முன்னணி கூட்டணிக்கு 2004 முதல் 2014 வரை தலைமை தாங்கியது போன்ற, "ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன்" இணைந்து பணியாற்றுவதற்கும், பாஜகவை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் தயார் - மல்லிகார்ஜூன் கார்கே பேச்சு.

தி டெலிகிராப்:

* பிரதமர் நரேந்திர மோடியும் கவுதம் அதானியும் ஒன்று என்று கூறிய ராகுல் காந்தி, அவர்களின் “நெக்ஸஸால்” நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கொள்ளையுடன் ஒப்பிட்டார்.

* அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர் ஷனுக்கு செய்திகளை தருவதற்கு இதுவரை இருந்து வந்த பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா நீக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.யின் ஹிந்துஸ்தான் சமாச்சார் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம். இதற்கு ரூ.7.69 கோடியை மோடி அரசின் பிரச்சார் பாரதி அளிக்கும்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment