ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை கார்கே, ப. சிதம்பரம், கெஜ்ரிவால் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 2, 2023

ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை கார்கே, ப. சிதம்பரம், கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடில்லி, பிப்.2 ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த (1.2.2023) நிதிநிலை அறிக்கைமீது தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர். அவை வருமாறு:

மல்லிகார்ஜூன கார்கே

ஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், 'மொத்தத்தில் மோடி அரசு மக்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. நாட்டின் பொரு ளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவு, பருப்பு, பால், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தி மோடி அரசு நாட்டைக் கொள்ளையடித்துள்ளது. பா.ஜனதா மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கை சான்று' என சாடினார். 

ப. சிதம்பரம்

ஒன்றிய நிதிநிலை அறிக்கை, பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளதாக மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை. கொடூரமான மற்றும் பகுத்தறிவற்ற ஜி.எஸ்.டி விகிதங்களில் எந்தக் குறைப்பும் இல்லை. பெட்ரோல், டீசல், சிமெண்டு, உரங்கள் போன்றவற்றின் விலைகளில் குறைப்பு இல்லை. மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாத பல கூடுதல் கட்டணம் மற்றும் செஸ்களில் எந்தக் குறைப்பும் இல்லை' என குற்றம் சாட்டினார். மேலும் அவர், 'இந்த நிதிநிலை அறிக்கையால் யாருக்கு லாபம்? நிச்சயமாக ஏழைகளுக்கு அல்ல. வேலை தேடும் இளைஞர்கள், வேலை இழந்த வர்கள், பெரும்பகுதி வரி செலுத்து வோர், இல்லத்தரசிகள் ஆகியோருக்கும் அல்ல. மொத்தத்தில் பெரும்பான் மையாக இருக்கும் மக்களுக்கானது அல்ல' என தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி 2.64 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது 

கெட்ட வாய்ப்பானது. சுகா தாரத்துக்கான நிதி 2.2 சதவீதத்திலிருந்து 1.98 சதவீதமாக குறைத்தது தீங்கு விளைவிக்கும். கடந்தாண்டு டில்லி மக்கள் வருமான வரியாக ரூ.1.75 லட்சம் கோடி செலுத்தினர். இதில் டில்லி மேம்பாட்டுக்கு ரூ.325 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் டில்லி கவனிக்கப்படுகிறது. இது நியாய மற்றது. 

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.

No comments:

Post a Comment