செய்தியாளர் கேள்வியும் தமிழர் தலைவர் பதிலும்!
சென்னை, பிப்.15 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்பற்றி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பதில் வருமாறு:
நேற்று (14.2.2023) கும்மிடிப்பூண்டி கழக மாவட்டம் புழலில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
எங்களைவிட மகிழ்ச்சியடைகிறவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்!
செய்தியாளர்: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறதே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: அப்படி ஒரு செய்தி இருந்து, அது உண்மையாக இருந்தால், எங்களைவிட மகிழ்ச்சியடைகிறவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
அதேநேரத்தில், இதுபோன்ற செய்திகளைப் பரப்பு வதைவிட, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்மூலமாக, அந்தக் கொள்கைக்கு வலிமை சேர்த்தால் நல்லது.
ஆனால், வெறுமனே இப்படி மற்றவர்கள் சொல்வதின்மூலமாக, அது வெறும் விமர்சனத்திற்கு ஆளாகுமே தவிர, செயல்பாட்டிற்கு அது எந்த அளவிற்கு உதவும் என்பதைப்பற்றி இதைப் பரப்பு கிறவர்கள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
ஏனென்றால், இதற்குப் பாரதூர விளைவுகள் உண்டு.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment