முஸ்லிம்களுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சந்திப்பு தேர்தல் உத்தியும் தந்திரமுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

முஸ்லிம்களுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சந்திப்பு தேர்தல் உத்தியும் தந்திரமுமா?

 புதுடில்லி, பிப். 1- முஸ்லிம்களுடன் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள் சந்தித்து - காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

டில்லியில் முக்கிய முஸ்லிம் தலைவர்களுடன் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர்கள் மீண்டும் சந்திப்பு நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. அப்போது காசி, மதுரா மசூதிகள் உள் ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி இக்கூட்டம், டில்லி யின் மேனாள் துணை நிலை ஆளுநரான நஜீப் ஜங் இல்லத்தில் நடை பெற்றது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாக் வத் அனுமதியின் பேரில் அதன் முக்கிய நிர்வாகிகளான இந்திரேஷ்குமார், ராம்லால் மற்றும் கிருஷ்ண கோபால் தாஸ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முஸ்லிம்கள் தரப் பில் ஜமாய்த்_-எ_-இஸ்லாமி ஹிந்த், ஜமாய்த்_எ_-உலாமா ஹிந்தின் இரு பிரிவினர், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட முக்கிய நிர் வாகிகள் என 10 பேர் இருந்தனர். இதில், சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகள் குறித்து முஸ்லிம்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதே போல், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆளும் ஒன்றிய அரசுக்கு ஆதரவ ளிப்பது, காசி மற்றும் மதுராவின் மசூதிகளை ஹிந்துக்களுக்காக விட்டுக் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.

இது குறித்து ‘ஜமாய்த் _எ _இஸ்லாமி ஹிந்தின் தேசிய செய லாளரான சையத் தன்வீர் அகமது கூறியதாவது: மிகவும் நல்ல சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்புகளை தொடர இரு தரப்பினரும் விரும் பினர். முதல் சந்திப்பினால் கிடைக்க வேண்டிய நல்ல மாற் றத்துக்கு பதிலாக எழுந்த வெறுப் புணர்வு பேச்சுக்களால் நிலைமை மேலும் மோச மானது. இதனால், முத லில் இதுபோல் பேசுபவர் கள் கண்டிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு நாட்டில் மோசம டைந்துள்ளது. ஆளும் பாஜகவின் மீது ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாடு உள்ள தால் அதன் தலைவர்கள் அக்கட்சி, அரசுக்கு எடுத்துக்கூற வேண்டினோம். கும்பலாக அடித் துக் கொலை, புல்டோசர் அரசியல், அநாவசிய மான கைதுகள் போன்ற வற்றை தடுக்க வலியுறுத்த வேண் டும். இனப் படு கொலைக்கு குரல் தருவோர் மீது நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும். முஸ்லிம்களின் அரசியல் நடவடிக்கை மற்றும் கல் வியை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கை கள் விடுக்கப்பட்டன.

இவற்றில் வெறுப்பு ணர்வு உள் ளிட்ட பல பிரச்சினைகள் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஏற்கப் பட்டன. தேசியவாதம், பசுவதை தடுப்பு, முத் தலாக் தடை போன்ற வற்றுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கவும் கோரப் பட்டது.

பாபர் மசூதி விவகா ரம் போன்ற பிரச்சினை இருப்பதாக காசி, மதுரா வின் மசூதிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. இது கொடுக் கல், வாங்கலாகப் பேசும் பிரச்சினை அல்ல.

சட்டப் பிரச்சினை யான இது, ஆதாரங்களின் அடிப்படையி லானது. பாபர் மசூதிக்காகவும் நாம் நீதிமன்றக் கதவு களை தட்டினோம், அதில் கிடைத்த பலனிலும் எங்களுக்கு திருப்தி இல்லை.

இப்பிரச்சினை ஓயும் என்ற உறுதியில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக நாங்களும் தயாராக வராததால் பேசவில்லை. இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக் கப்படாததால், பத்திரிகையாளர்களை நாங்கள் சந் திக்கவில்லை. இதனால், ரகசியமாக இக்கூட்டம் நடந்ததாகக் கூறுவது தவறான கருத்து. இவ்வாறு சையத் தன்வீர் அகமது தெரிவித் தார்.இதற்கு முன் கடந்த வருடம் ஆகஸ்டில் இது போன்ற முதல் கூட்டம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் துடன் டில்லியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நஜீப் ஜங், மேனாள் ஒன்றிய தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, மூத்த பத்திரிகையாளர் ஷாஹீத் சித்திக்கீ, பிரபல உணவு விடுதி அதிபர் சயீத் ஷெர்வாணி ஆகியோரும் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக் கூட்டம், சுமார் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. இதன் அடுத்த கூட்டமும் விரைவில் நடை பெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.

முஸ்லிம் வாக்குகள்:

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் முஸ்லிம் வாக் குகள் அனைத்தையும் பெற பாஜக தீவிரம் காட்டுகிறது.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் கடந்த இரண்டு தேசிய நிர்வாகி கள் கூட்டத்தில் குரல் கொடுத்திருந்தார்.

 இதன் தாக்கமாக, 2014-க்கு பின் முதன்முறையாக இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை தம் கட்சி சார்பில் திரிபுரா வின் சட்டப் பேரவை தேர்தலில் நிற்க பாஜக வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment