புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சை முறைகளை அறிந்துகொள்ள அமைச்சர் தலைமையில் குழு ஜப்பான் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சை முறைகளை அறிந்துகொள்ள அமைச்சர் தலைமையில் குழு ஜப்பான் பயணம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, பிப்.6 புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று செல்கின்றனர்.

இதுதொடர்பாக நேற்று (5.2.2023) சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

உலக அளவில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுவதுமாக குணப்படுத்திவிடலாமென மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலக அளவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் முன்னோடி நாடாக ஜப்பான் உள்ளது. ஜப்பானில் புற்றுநோய் ஆராய்ச்சி மய்யங்கள், சிகிச்சை முறைகள் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கேட்டுக் கொண்டதால், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத் தலின்படி ஜப்பான் நாட்டின் புற்றுநோய் கொள்கை, ஆராய்ச்சி,சிகிச்சை மற்றும் மருத்துவக் கட் டமைப்புகளை அறிந்து கொள் வதற்காக நான் (மா.சுப்பிரமணியன்), செயலாளர் ப.செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், புற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய குழு 5 நாள் பயணமாக நாளை (இன்று) அதிகாலை ஜப்பான் செல்கிறோம். ஒன்றிய அரசின் பிரதிநிதிகளும் வருகின்றனர். எதிர்காலத்தில் தமிழ் நாடு மருத்துவர்களை ஜப்பானுக்கு அனுப்பி சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ள செய்வதற்கு இந்த பயணம் உதவியாக இருக்கும்.

ஏற்கெனவே ஜப்பான் பன் னாட்டு கூட்டுறவு முகமை தமிழ் நாட்டில் மெட்ரோ ரயில் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. மதுரை, கீழ்ப்பாக்கம், கோவை மருத்துவக் கல்லூரிகளில் புதிய மருத்துவமனைகளை கட்டுவது உட்பட சுகாதாரத் துறைக்கு ரூ.1,387.88 கோடி கடன் அளித் துள்ளது. 

மதுரை எய்ம்ஸ்: கடந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூ ரியின் 50 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டும் 50 மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்துள்ளது. இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment