செங்கல்பட்டு சமத்துவப் பொங்கல் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

செங்கல்பட்டு சமத்துவப் பொங்கல் விழா

செங்கல்பட்டு, பிப். 1- 16.1.2023 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை  செங்கல்பட்டு களத்து மேட்டுத்தெருவில் தி.மு.க நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் கோ. அப்துல்ஹபீஸ் ஒருங்கிணைப் பில் 1ஆவது வார்டு தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் கவு.தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ் ஆசிரியர் கவிஞன் வெற்றிக் கண்ணன் முன்னிலையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் ஓவியகவி நா. வீரமணி செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் ஆகி யோர் வாழ்த்துரை வழங் கினர்.

மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை தை-1 தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவினை திராவிட தமிழர்கள் ஜாதி மதம் கடந்து அனைவரும் கொண்டாட வேண்டும் என தந்தை பெரியார் ஏன் வலியுறுத்தினார் என்பதை விளக்கினார். 

அதன்படி இன்றைய நாளில் தமிழர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுகிறோம். தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், அறிவர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும்,  அறிவித்த தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒத்த சிந்தனையும் நட்பும் கொண்டு இந்த மக்க ளுக்காக உழைத்தவர்கள் தந்தை பெரியார் புத்தரைக் கொண்டாடினார் - புத்தியை பயன்படுத்தும் அனைவரும் புத்தர் என்றார்.  வள்ளலாரை கொண்டாடினார். திருக் குறள் மாநாடு நடத்தினார்.

 திராவிட திருநாள் தை 1 தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட வேண்டும். எனவே அனைவரையும் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடுகிறோம் திராவிடர்களை  பெருமைப்படுத்தும் விழாவாக கொண்டாடுகிறோம் மகிழ்ச்சி கொள்வோம் என சிறப்பு உரையாற்றினார். 

முன்னதாக 15.1.2023 நிகழ்ச்சியில் ஓவியப் போட்டி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துப்புரவு பணியாளர்களுக்கு பயனாடைகள் அணிவித்து பொங்கல் பரிசுகள் வழங்கப்பட் டன. 

இந்நிகழ்வில் மேனாள் நகரமன்ற திமுக உறுப்பினர் மீராசபாபதி மற்றும் ஆசிரியர்கள் நண்பர்கள் குழந்தைகள் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் சுயமரியாதை சுடரொளி அய்ஸ் பேக்டரி கங்கா தரன் அவர்களின் பேரனும் 1ஆவது வார்டு தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் கவுதம. தமிழ் செல்வன் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்தினார்.

No comments:

Post a Comment