மண்டல் சிலையினை திறந்திட ஆந்திர மாநிலம் குண்டூருக்குச் சென்ற தமிழர் தலைவர் அவர்கள் சிலைத் திறப்பு மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்து விஜயவாடா வழியாக சென்னை திரும்புகையில், விஜயவாடா நாத்திகர் மய்யத்திற்கு நேற்று (12.2.2023) மாலை 6 மணி அளவில் சென்றிருந்தார். நாத்திகர் மய்யத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை, மய்யத்தின் தலைவர் டாக்டர் கோ. சமரம் மற்றும் கோ. நியான்தா, மாரு - ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.
மறைந்த அர்ஜுன் ராவ் மற்றும் விஜயம் ஆகியோருக்கு இரங்கல்
நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநராக இருந்த கோ. விஜயம் அவர்கள் மற்றும் கோரா அவர்களின் மூத்த மருமகன் அர்ஜுன் ராவ் ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தமிழர் தலைவர் நேரில் தெரிவித்தார். நாத்திகர் மய்யப் பொறுப்பாளர்களுடன் மய்யப் பணிகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்து அறிந்து கொண்டார். கடந்த காலத்தைப் போலவே நாத்திகர் மய்யமும், திராவிடர் கழகமும் ஒருங்கிணைந்து நாத்திக சமுதாயப் பணியில் ஈடுபட்டு வர வேண்டும். அடுத்த தலைமுறையிலும் பணி பெருகிட வேண்டும் எனும் விருப்பத்தினையும் தெரிவித்தார். தமிழர் தலைவருடன் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் சென்றிருந்தனர்.
No comments:
Post a Comment